எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H41) இறுதியாக தவாஃபுல் விதாஃ


இறுதியாக தவாஃபுல் விதாஃ

மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று கூறப்படும் தவாஃபை செய்ய வேண்டும்.


விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள். விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது ”தவாஃபுல் விதாஃ” என்று கூறப்படுகின்றது.


மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: முஸ்லிம் 2350, 2351


தவாஃபிற்கு பின் தொழுகை


தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும் செய்யப்பட வேண்டும். பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும், உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


நூல்: புகாரி: 396, 1600, 1616, 1624, 1646, 1647, 1794)


இந்த தவாஃபுல் இஃபாளாவைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம். இதற்குப் பின் ஹரமில் தங்கியிருக்கக் கூடாது. எனவே, அனைத்து வேலைகளையும் முடித்தபிறகு இந்த தவாஃப் செய்ய வேண்டும்.


மாதவிடாய் பெண்களுக்கு விதிவிலக்கு


இறுதியாக, தவாஃபும், தொழுகையும் நிறைவேற்ற வேண்டும் என்று பார்த்தோம். ஆயினும் மாதவிடாய் பெண்களுக்கு மட்டும், இதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  'இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)  நூல்: புகாரி 1755

No comments

Powered by Blogger.