எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H25) பலவீனர்களுக்கு சலுகை

பலவீனர்களுக்கு சலுகை


பலவீனர்கள் மினாவிற்கு திரும்பலாம்:


முஸ்தலிஃபாவிலிருந்து இப்போது மீண்டும் மினாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்.


பஜ்ரு தொழுத பின்பே, மினாவுக்குப் புறப்பட வேண்டும்.


என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம். அதாவது முஸ்தலிஃபாவில் பஜ்ரு தொழுவதற்கு முன்பே, 10-ஆம் நாள் பஜ்ருக்கு முன்பே, அதற்கு முன்னர் வரும் 10-ஆம் நாள் இரவிலேயே இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம். இதற்குரிய ஆதாரம்..


”ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.”


அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1681, 1680


”தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.”


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1678, 1677, 1856


No comments

Powered by Blogger.