எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H23) அரஃபாவில் துஆ செய்தல்

அரஃபாவில் துஆ செய்தல்


அரஃபா மைதானத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பாவ மன்னிப்பு தேட வேண்டும்.


”நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.”


அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)


நூல்: நஸயீ 2961


அரஃபாவில் தொழுகை எப்படி?


அரஃபாவில் லுஹரையும், அஸரையும் ஜம்வு செய்து இமாம் தொழுவார். அதில் சேர்ந்து தொழ வேண்டும்.


முன்பின் சுன்னத், வேறு தொழுகைகள் இல்லை


”…பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச்செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.”


நூல்: முஸ்லிம் 2334


குத்பாவை கேட்பது அவசியம்


தொழுகைக்கு முன், முன் நிகழ்த்தப்படும் குத்பாவை (உரையை) செவிமடுக்க வேண்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ”உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


நூல்: முஸ்லிம் 2137


ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு இல்லை


அரஃபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது, ஹஜ் செய்யாத மக்களுக்கு சுன்னத் என்றாலும், ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.


பார்க்க: புகாரி 1658, 1663, 1988, 1989, 5604, 5618, 5636


அரஃபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்க வேண்டும். எனினும், இப்போது மஃரிப் தொழக்கூடாது. மஃரிப் தொழாமல், முஸ்தலிஃபாவுக்குச் செல்ல வேண்டும்.


No comments

Powered by Blogger.