H21) மினாவில் 5 தொழுகைகள்
மினாவில் 5 தொழுகைகள்
துல்ஹஜ் பிறை 8 அன்று, லுஹருக்கு முன்னதாக மினாவிற்கு சென்று இருப்பீர்கள். லுஹர், அஸர், மஃரிப், இஷா, பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். (மஃரிபைத் தவிர மற்ற தொழுகைகளை) இரண்டு, இரண்டு ரகஅத்களாக (ஒவ்வொரு தொழுகையையும் அந்தந்த நேரத்தில்) தொழ வேண்டும்.
நூல்: முஸ்லிம் 2137
”தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ”மினாவில்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல் அஸீஸ் பின் ரபீவு, நூல்: புகாரி 1653, 1763
”எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856
இரண்டிரண்டாக
இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும்.
மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வைத்தார்கள்.
அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)
நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656
கஸர் மட்டுமே! ஜம்வு இல்லை
அனைத்து தொழுகைகளையும் (கஸர்) சுருக்கி தொழ வேண்டும்.
ஆனால், (ஜம்வு) சேர்த்துத் தொழக்கூடாது. அதாவது, ஒவ்வொரு தொழுகையையும் அந்தந்த நேரத்தில் தொழுது கொள்ள வேண்டும்.
No comments