H1) ஆயத்தமாகுதல்
ஆயத்தமாகுதல்
ஹஜ் அல்லது உம்ரா என்னும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தயாராகும் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசியமான பொருட்கள்.
1) தையல் இல்லாத வேஷ்டி (கீழாடை)
2) தையல் இல்லாத மேல் துண்டு (மேலாடை)
3) காலணிகள் (செருப்புகள்).
4) குர்பானி, போக்குவரத்துக்கான பொருளாதாரம்
உங்கள் வசதிக்காக,
இஹ்ராம் கட்டியபிறகு உடலில் உள்ள முடிகளை நீக்கக்கூடாது என்பதால், விரும்பினால் அதற்கு முன்னதாக உடலில் உள்ள முடிகளை களைந்து கொள்ளுங்கள்.
வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள (கூர்முனை இல்லாத) ஒரு சிறிய குடை ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்.
அதிகப்படியாக ஒரு செட் செருப்பு மற்றும் காலுறைகளை வைத்துக்கொள்ளலாம்.
செருப்பு இல்லாவிட்டால் காலுறைகள் அணிந்து கொள்ளலாம். (கரண்டைக்குக் கீழே இருக்குமாறு அதன் மேற்பகுதியை வெட்டி விடுங்கள். அல்லது (Loafer socks) லோஃபர் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள் )
மாத்திரைகள் போன்ற உங்களது அத்தியாவசியமான மற்ற பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்கிறீர்களோ, அந்த மருந்துகளை உங்களுக்கு பரிந்துரை செய்த மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை (doctor's prescription) அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் மருந்துகள் பறிமுதல் செய்யப்படலாம்.
சமைப்பதற்கு தேவையான இன்டக்க்ஷன் ஸ்டவ், Tea/coffee Kettle, ஓரிரு பாத்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்களும் எடுத்துக் கொள்வது உங்களுடைய விருப்பம்.
சவுதியில் பெரும்பாலும், எலெக்டிரிக் 3-பின் சாக்கெட் பட்டை வடிவில் இருப்பதால், நாம் கொண்டு செல்லும் பிளக்-களை சொருகுவதற்கு வசதியாக, 3Pin Square to Round Adapter ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.
எச்சரிக்கை,
சவுதி அரசால் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் உள்ளன. அவற்றை சவுதிக்குள் எடுத்துச் சென்றால், பறிமுதல் அல்லது பல ஆண்டுகள் சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அவையாவன.
1) விற்பனை செய்வதற்காக குர்ஆன் பிரதிகள்
2) வெடி பொருட்கள், சூதாட்ட விளையாட்டு பொருட்கள்
3) போதைப் பொருட்கள், போதை தடுப்பு மருந்துகள், ஊசிகள்
4) பான் பராக் போன்ற பொருட்கள், புகையிலை (பீடி, சிகரெட்), சிகரெட் விளம்பரங்கள்
6) ஜாதிக்காய், (உணவில் சேர்க்கப்படுகிற) கசகசா (இதனால் போதை ஏற்படுவதில்லை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், சவுதிக்குள் இதனை எடுத்துச் செல்ல, சவுதி அரசு அனுமதிப்பதில்லை)
பிறருக்காக நீங்கள் கொண்டு செல்கிற, அங்கிருந்து கொண்டு வருகிற பார்சல்களாக இருந்தாலும், அவற்றை நீங்கள் கொண்டு செல்லும் முன், நன்றாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேற்குறிப்பிட்ட பொருட்களை நீங்கள் எந்த காரணத்திற்காக எடுத்துச் சென்றாலும், கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி. எனவே, மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.
No comments