எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ராகி பானம்

 


தேவையான பொருட்கள்:

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி

உப்பு - ஒரு பின்ச்

சர்க்கரை - ஐந்து டீஸ்பூன்

தண்ணீர் - 2 1/4 கப்

பால் - 1 1/4 கப்

ஏலம் - ஒன்று

நெய் - ஒரு சொட்டு

சஃப்ரான் - இரண்டு இதழ்


செய்முறை:

🔘 முதலில் ராகியை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலக்கி ஒரு டீ வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.

🔘 மறுபடியும் வடிகட்டிய ராகியை அதே டம்ளரில் கொட்டி முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிக்கட்டவும்.

🔘 இந்த வடிகட்டிய ராகி ஒரு டீ கைப்பிடியில் ஊற்றி அதில் உப்பு சர்க்கரை, ஏலம் போட்டு நல்ல காய்ச்சி கடைசியில் பால், சஃப்ரான், நெய் ஊற்றி இறக்கவும்.

No comments

Powered by Blogger.