எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ஸ்டஃப்ட் முட்டை சப்பாத்தி

 


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

முட்டை - ஒன்று

மிளகு, சீரகத்தூள் - கால் தேக்கரண்டி

உப்பு -  தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு


செய்முறை:

🔘 கோதுமை மாவில் உப்பு,  சிறிது எண்ணெய் போட்டு தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

🔘 முட்டையில் உப்பு, மிளகு சீரகத்தூள் போட்டு அடித்துக் கொள்ளவும்.

🔘 ஒரு உருண்டை மாவை எடுத்து சப்பாத்தி பலகையில் வைத்து பெரிய சப்பாத்தியாக பரத்தவும்

🔘 அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பரத்திய சப்பாத்தியை போட்டு அடித்து வைத்த முட்டையை ஊற்றி எல்லா பக்கமும் படும்படி ஒரு கரண்டியால் தேய்த்து விடவும்.

🔘 பின் சப்பாத்தியை படத்தில் உள்ளது போல் நான்கு பக்கமும் மடிக்கவும்.

🔘 மிதமான தீயில் இரு பக்கமும் எண்ணெய் விட்டு வேக விடவும். நடுவில் தோசை திருப்பியால் லேசாக கீறவும் (இப்படி கீறினால் உள்ளே இருக்கும் முட்டை வேகும்)

🔘 இப்போது ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி

No comments

Powered by Blogger.