எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

மொஹல் சிக்கன் கறி

 

தேவையான பொருட்கள்:

கொத்திய கோழிக்கறி - அரைக் கிலோ

பச்சை மிளகாய் - 6

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 2

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 10 பற்கள்

இஞ்சி - 2 அங்குலத் துண்டு

நெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு


செய்முறை:

🔘 இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

🔘 வாணலியில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

🔘 அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.

🔘 கறி முக்கால் பதம் வெந்த நிலையில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்கவும்.

🔘 அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கவும்.

🔘 சுவையான மொஹல் சிக்கன் கறி ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.


குறிப்புகள்

No comments

Powered by Blogger.