எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

வாழைக்காய் பொரியல்

 

தேவையான பொருட்கள்:

முற்றிய வாழைக்காய் - 2

கடுகு - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகாய்தூள் - 3 ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

எண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்

உப்பு - ஒரு ஸ்பூன்


செய்முறை:

🔘 வாழைக்காயை தோல் சீவி சற்று தடிமனான துண்டுகளாக வட்டவடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

🔘 ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலையை போடவும்.

🔘 பிறகு வாழைக்காய் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

🔘 மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து அதன்மேல் ஊற்றி பிரட்டிவிட்டு, வேகும் அளவு (சுமார் ஒரு டம்ளர்) தண்ணீர் விட்டு மூடி போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்து வெந்தவுடன் இறக்கவும்.


No comments

Powered by Blogger.