எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ஹமூர் மீன் கட்லெட்


 தேவையான பொருட்கள்:

ஹமூர் மீன் - அரை கிலோ

காஷ்மீர் மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

முட்டை வெள்ளை கரு - ஒன்று

மைதா - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


செய்முறை:

🔘 ஹமூர் மீன் எலும்பில்லாதது சுத்தமாக கழுவி சதுர வடிவமாக (அல்லது) வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்.

🔘 முட்டை வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து அதில் மிளகாய் தூள், உப்பு மைதா, எண்ணெய் கலந்து மீனில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

🔘 பிறகு எப்படி பிடிக்குமோ அப்படி டீப் ப்ரை (அ) ஷலோ ப்ரை பண்ணவேண்டும்.


குறிப்புகள்

No comments

Powered by Blogger.