எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

அவரைக்காய் சைனீஸ் கூட்டு

 


தேவையான பொருட்கள்:

வறுத்த காய்ந்த மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி

மேகி க்யூப் - பாதி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தாளிக்க

உப்பு - ஒரு தேக்கரண்டி

மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு


செய்முறை:

🔘 அவரைக்காயை ஒரு இன்ச் அளவுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

🔘 வாணலியில் எண்ணெய் ஊற்றி பாதி அளவு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

🔘 அத்துடன் கறிவேப்பிலை மற்றும் மிளகாய்த் தூளைப் போட்டுக் கிளறவும்.

🔘 பிறகு மேகி க்யூப் மற்றும் அவரைக்காயைப் போட்டு வதக்கி, மூடி வைத்து வேகவிடவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறவும். அவரைக்காய் வெந்ததும் மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறிவிட்டு, மல்லித் தழை தூவி இறக்கவும்.

🔘 சுவையான அவரைக்காய் சைனீஸ் கூட்டு தயார்.


குறிப்புகள்

1. மேகி க்யூபை சேர்க்கும் போது தூளாக்கிச் சேர்க்கவும். இல்லையென்றால் கட்டியாகவே இருக்கும்.

No comments

Powered by Blogger.