ஷாஹி டோஸ்ட்
தேவையான பொருட்கள்:
பிரட் - 10 துண்டுகள்
நெய் - 3 ஸ்பூன்
நீர்- கால் கப்
சீனி- கால் கப்
ஏலக்காய் தூள்- சிறிதளவு
கோயா- 5 ஸ்பூன்
கிஸ்மிஸ்- 10 (பொடியாய் நறுக்கியது)
பாதாம் - 10 (பொடியாய் நறுக்கியது)
தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
கன்டன்ஸ்டன் மில்க்- 3 ஸ்பூன்
ஆரஞ்சு கலர்- சிறிதளவு
செய்முறை:
🔘 பானில் நெய் விட்டு பிரட்டை இரு பக்கமும் சமமாக சூடு காட்டவும்
🔘 ஒரு பாத்திரத்தில் சீனி,தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்தில் காய்ச்சி வைக்கவும். கொதிக்கும் போதே ஆரஞ்சு கலர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்
🔘 கோயா, கிஸ்மிஸ்,பாதாம், தேங்காய் துருவல், கண்டன்ஸ்டன் மில்க் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.
🔘 சூடு காட்டிய பிரட்டை சீனிபாகில் நனைத்து(அல்லது பிரட்டில் எல்லா பக்கமும் லேசாக நனையும் படி ஸ்பூனால் தடவலாம்) எடுக்கவும்
🔘 ஒரு தட்டில் வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள பேஸ்ட் சிறிதளவு தடவவும்.
🔘 இப்படியாக தனி தனியாக செய்து பரிமாறவும்.
குறிப்புகள்
No comments