எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

வெஜ் நோன்பு கஞ்சி சப்ஜி


 தேவையான பொருட்கள்:-

அரிசி - ஒரு டம்ளர் பொடித்தது (நொய்)

பாசிபருப்பு - ஒரு கைப்பிடி ( லேசாக வறுத்தது)

சின்ன வெங்காயம் - 150 கிராம்

பீன்ஸ் - 200 கிராம்

கேரட் - ஒன்று பெரியது

தக்காளி - ஒன்று

பூண்டு - ஒரு முழு பூண்டு

கொத்தமல்லி - சிறிது

புதினா - சிறிது

மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி

பச்சைமிளகாய் - இரண்டு

தேங்காய் பால் - ஒரு கப்

உப்பு - மூன்று தேக்கரண்டி (அ) தேவைக்கு


தாளிக்க:

நெய் + எண்ணெய் - நான்கு தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 50 கிராம்


செய்முறை:

🔘 ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் பத்து டம்ளர் தண்ணீர் ஊற்றி உலை கொதிக்க விட வேண்டும்.

🔘 கொதி வந்ததும் அரிசி பொடித்ததை போட்டு உப்பு போட்டு வேக விட வேண்டும். இடையிடையே நன்கு கிளறி விட வேண்டும்.

🔘 முக்கால் பாகம் வெந்து கொண்டு இருக்கும் போது மஞ்சள் பொடி, வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக அரிந்து போட வேண்டும். பிறகு தக்காளியை நீளவாக்கில் ஆறாக அரிந்து போடவேண்டும். பச்சை மிளகாயை முழுசாக போட வேண்டும். நன்கு அடிபிடிக்காமல் ஆய்ந்து கழுவி போட வேண்டும்.

🔘 கட்டியாக இருந்தால் வெந்நீர் ஊற்றி கொள்ளலாம். தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

🔘 கடைசியில் எண்ணெய் + நெய் ஊற்றி பட்டை போட்டு சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சியில் கொட்டி இறக்கி குடிக்கவும்.


குறிப்புகள்:-

No comments

Powered by Blogger.