எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ஷார்ஜா ஜுஸ்

 


தேவையான பொருட்கள்:


பால்                1/2 லிட்டர்

சீனி                150 கிராம்

வாழைப்பழம்        1

மாதுளை பழம்      1சிறியது

வறுத்த வேர்கடலை 1/4 கப்

ஐஸ் கட்டி          1/2 கப்


செய்முறை:

🔘 பாலை காயிச்சி நன்கு ஆறவிடவும்.

🔘 வேர்கடலையை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்துக் கொள்ளவும்.

🔘 வாழைப்பழத்தை தோல் நீக்கி வைக்கவும்.

🔘 மாதுளை பழத்தையும் தோல் நீக்கி வைக்கவும்.

🔘 பின் மிக்ஸியில் பழங்களை போட்டு நன்கு அரைக்கவும் பழங்கள் நன்கு அரைந்ததும் சீனியையும்,பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

🔘 அதில் பொடி செய்து வைத்துள்ள வேர்கடலையை சேர்த்து நன்கு நுறை பொங்க அடிக்கவும்.

🔘 ஐஸ் கட்டியை சேர்த்து நன்கு அடிக்கவும்.

🔘 சுவையான ஷார்ஜா ஜுஸ் ரெடி.

🔘 நீளமான கண்ணாடி க்ளாஸில் ஊற்றி சில்லென்று பரிமாறவும்

No comments

Powered by Blogger.