எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ஜாலர்


 தேவையான பொருட்கள்:


மைதா மாவு - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 8

தேங்காய் துருவல் - 2 கப்

முட்டை - 2

சோம்பு - அரை மேசைக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

சீனி - அரை தேக்கரண்டி


செய்முறை:

🔘 தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி கொள்ளவும்.

🔘 இதனை செய்வதற்கு ஜாலர் குவளை மிகவும் அவசியம். பொதுவாக இஸ்லாமிய இல்லங்கள் அனைத்திலும் இது இருக்கும். ஒரு குவளையின் அடிபாகத்தில் மூன்று புனல் வடிவ கூம்புகள் இருக்கும். கூம்புகளின் அடிபாகத்தில் சிறிய துளை இருக்கும். இதன் வழியாகத்தான் மாவு வெளிவரும். எவர்சில்வர், பிளாஸ்டிக் ஆகியவற்றில் இந்த குவளை கிடைக்கின்றது.

🔘 துருவியத் தேங்காய், வெங்காயம், சோம்பு இவற்றை மிக்ஸியில் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி, அரைத்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் இரண்டு முறை தண்ணீர் சேர்த்து பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

🔘 முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி உப்பு, சீனி போட்டு 2 நிமிடம் அடித்துக் கொள்ளவும். இதனைத் தேங்காய் பாலுடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

🔘 பின்னர் அதில் சலித்த மைதாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஜாலர் குவளையில் ஊற்றினால், மாவு எளிதாக வெளிவரும் பதத்தில் சற்று நீர்க்க இருக்கவேண்டும். மாவின் பதம் இதற்கு முக்கியம்.

🔘 ஒரு தவாவை அடுப்பில் வைத்து, மேலே லேசாக நெய் தடவவும். ஜாலர் குவளையில் மாவை எடுத்துக்கொண்டு, குவளையை தவாவிற்கு நேராக சுற்றி, மாவை விசிறவும். ஜாங்கிரி, முறுக்கு பிழிவதுபோல் குவளையை சுற்ற வேண்டும்.

🔘 அதிக நெருக்கமாக சுற்றி விடாமல், சற்று கலக்கச் சுற்றவும். (இஸ்லாமியர்கள் "மாவை விசிறுதல்" என்று குறிப்பிடுவார்கள்.)

🔘 இது மிக விரைவாக வெந்துவிடும். ஊற்றி சில நொடிகளில் ஜாலரின் மேல்புறத்தில் லேசாக நெய் தடவவும்.

🔘 நெய் தடவி 30 விநாடிகளில் எடுத்து விடவும். இதனைத் திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை. இதே போல் அனைத்து மாவையும் ஜாலர்களாக ஊற்றி எடுக்கவும்.

🔘 ஜாலர் மிகவும் மென்மையாக இருக்கவேண்டும். இதற்கு மெல்லிய இழைகளாக மாவை விசிற வேண்டும். மாவின் பதமும் சரியாக இருக்கவேண்டும். 

சுவையான ஜாலர் தயார். 

குறிப்புகள்

1. குழம்பு, குருமா, கறி என அனைத்து வகை பக்க உணவுகளும் இதற்குப் 

பொருந்தும். வெறும் சர்க்கரையை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால்கூட மிகவும் 

சுவையாக இருக்கும்.

No comments

Powered by Blogger.