எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

அரிசி மாவு அடை

 


தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு கப்

முழு உளுந்து - அரை கப்

கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு மேசைக்கரண்டி

இஞ்சி - அரை அங்குலத் துண்டு

உப்பு - அரை தேக்கரண்டி+ஒரு சிட்டிகை


செய்முறை:

🔘 இஞ்சியை தோல் சீவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதே போல கறிவேப்பிலை, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

🔘 அரிசி மாவு மற்றும் கடலைப்பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். முழு உளுந்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

🔘 ஊற வைத்த உளுந்தை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

🔘 அரிசி மாவில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரைத்த உளுந்து மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.

🔘 வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு ஒரு நிமிடம் வதக்கி மாவில் போட்டு கிளறி விடவும்.

🔘 அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.

🔘 தோசைக்கல்லில் அல்லது தவாவில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் மாவை ஒன்றரை கரண்டி அளவு ஊற்றி நடுவில் லேசாக அழுத்தி வட்டமாக தேய்க்கவும்.

🔘 மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து விடவும்.

🔘 சுவையான அரிசிமாவு அடை ரெடி.

No comments

Powered by Blogger.