எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

மலாய் கார சட்னி




தேவையான பொருட்கள்:

இஞ்சி - 100 கிராம்

பூண்டு - 150 கிராம்

காய்ந்த மிளகாய் - 20 அல்லது 25

நல்லெண்ணெய் - 150 மில்லி

உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

🔘 வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, தோலுரித்த பூண்டைச் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். (பூண்டு மிகவும் கருகிவிடாமல் வேகும் அளவு பதமாக வதக்கவும்).

🔘 அதே எண்ணெயில் தோல் சீவி நறுக்கிய இஞ்சியைப் போட்டு லேசாக சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.

🔘 பிறகு காய்ந்த மிளகாயைத் தீய்ந்துவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

🔘 வதக்கிய பூண்டுடன் இஞ்சி, வறுத்த காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, வாணலியில் உள்ள (பொரித்த) எண்ணெயையும் ஊற்றி மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். சுவையான மலாய் சட்னி தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.


குறிப்புகள்

1. எண்ணெய் கூடுதலாக தேவைப்பட்டால் இட்லி பொடிக்கு ஊற்றுவது போல் சட்னியில் ஊற்றிச் சாப்பிடலாம்.

No comments

Powered by Blogger.