எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

1 - Al-Faatiha

 1 - அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்) (Al-Faatiha - الفاتحة)


1:1 - அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).


1:2 - அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.


1:3 - (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.


1:4 - (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).


1:5 - (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.


1:6 - நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


1:7 - (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

                             Home                Next

No comments

Powered by Blogger.