99 - Az-Zalzala
99 - ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி) (Az-Zalzala - الزلزلة)
99:1 - பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது.
99:2 - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3 - "அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
99:4 - அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5 - (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6 - அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7 - எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்".
99:8 - அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
No comments