எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

96 - Al-Alaq

 96 - ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) (Al-Alaq - العلق)


96:1 - (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.


96:2 - 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.


96:3 - ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.


96:4 - அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.


96:5 - மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.


96:6 - எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.


96:7 - அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,.


96:8 - நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.


96:9 - தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா.?


96:10 - ஓர் அடியாரை - அவர் தொழும்போது,


96:11 - நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,


96:12 - அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,


96:13 - அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,


96:14 - நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா.?


96:15 - அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.


96:16 - தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,


96:17 - ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.


96:18 - நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.


96:19 - (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.


       Back                    Home                   Next


No comments

Powered by Blogger.