எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

93 - Ad-Dhuhaa

 93 - ஸூரத்துள் ளுஹா (முற்பகல்) (Ad-Dhuhaa - الضحى)


93:1 - முற்பகல் மீது சத்தியமாக.


93:2 - ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-


93:3 - உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.


93:4 - மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.


93:5 - இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.


93:6 - (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா.?


93:7 - இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.


93:8 - மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.


93:9 - எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.


93:10 - யாசிப்போரை விரட்டாதீர்.


93:11 - மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.


       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.