எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

91 - Ash-Shams

 91 - ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்) (Ash-Shams - الشمس)


91:1 - சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக.


91:2 - (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-


91:3 - (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-


91:4 - (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-


91:5 - வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-


91:6 - பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-


91:7 - ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-


91:8 - அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.


91:9 - அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.


91:10 - ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.


91:11 - 'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.


91:12 - அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,


91:13 - அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.


91:14 - ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.


91:15 - அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

       

       Back                    Home                   Next

No comments

Powered by Blogger.