எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

உளுத்தங்களி 2


 தேவையான பொருட்கள்:

அரைத்த மாவு - ஒரு கப்

முட்டை - ஒன்று

சீனி - அரை கப்

தேங்காய் பால் - ஒரு கப்

மைதா மாவு - கால் கப்

உப்பு - கால் தேக்கரண்டி

கலர் பவுடர் - ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் - கால் கப்

நெய் - ஒரு மேசைக்கரண்டி

மாவு செய்ய:

அரிசி - 100 கிராம்

வெள்ளை உளுந்து - 50 கிராம்


செய்முறை:

🔘 அரிசியை கழுவி வெய்யிலில் உலர்த்தி காயவைக்கவும். காயவைத்த அரிசியுடன், வெள்ளை உளுந்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

🔘 ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் மைதா மாவு, முட்டை, உப்பு, தேங்காய் பால் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

🔘 கரைத்த மாவுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலர் பவுடர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

🔘 ஒரு வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி, அடுப்பின் தீயை குறைத்து வைத்து கிளறவும்.

🔘 மாவு கட்டிவிழாமல் நன்கு கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

🔘 4 நிமிடம் கிளறிய பிறகு மாவு கொஞ்சம் கெட்டியாக ஆனதும் சீனியை போட்டு கிளறவும்.

🔘 அதன் மேல் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி 15 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும்.

🔘 மாவை கிளறி விடும் போது கரண்டியால் மாவை கட்டி இல்லாமல் உடைத்து விட்டு கிளறவும். களி வெந்ததும் இறக்கும் பொழுது நெய் ஊற்றி பொலபொலவென்று ஆகும் வரை கிளறிவிட்டு இறக்கவும்.

🔘 உளுத்தங்களி தயார். விருப்பப்பட்டால் உளுத்தங்களியில் முந்திரியை வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.


குறிப்புகள்

No comments

Powered by Blogger.