எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

113 - Al-Falaq

113 - ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை) (Al-Falaq - الفلق)


113:1 - (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.


113:2 - அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-


113:3 - இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-"


113:4 - இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,


113:5 - பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

 

        Back                    Home                   Next

No comments

Powered by Blogger.