111 - Al-Masad
111 - ஸூரத்துல் லஹப் (ஜுவாலை) (Al-Masad - المسد)
111:1 - அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
111:2 - அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3 - விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4 - விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,.
111:5 - அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
No comments