107 - Al-Maa'un
107 - ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்) (Al-Maa'un - الماعون)
107:1 - (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா.?
107:2 - பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3 - மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4 - இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5 - அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6 - அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7 - மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
No comments