எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

105 - Al-Fil

 105 - ஸூரத்துல் ஃபீல் (யானை) (Al-Fil - الفيل)


105:1 - (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?


105:2 - அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா.?


105:3 - மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.


105:4 - சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.


105:5 - அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.


       Back                    Home                   Next


No comments

Powered by Blogger.